ஊருக்கு ஓரமாய் ஒரு குடிசை ...!!
அத்தை மக நீ இருந்தும் ஒத்தையா நா வாடுறேண்டி ....!!
பெத்தவுக பேச்ச கேட்டு மத்தவன் போல என்ன மறந்த்துட்டியே ...!!
தூர தேசம் போயி மாமாங்கம் ஆச்சுதுன்னு இந்த மச்சான மறந்துட்டியா ..!!
நாம ஓடித்திரிந்த இடமெல்லாம் ஒப்பாரி பாடுதடி..!!
நாம கூடித்திரிந்த இடமெல்லாம் கூப்பாடு போடுதடி...!!!
நா வரமாட்டேன்னு சொல்ல நூறு காரணம் நீ சொல்ல..!!!
நா வாருவேன்னு சொல்ல ஒரு காரணம் கிடைக்கலையோ ...!!
ஒத்த ரூபா கிடைச்சாலும் உனக்காக சேத்துவ ச்சேன் ..!!
சேத்தபணம் செலவு பண்ண நீ இல்ல ...!!
நா செத்தாலும் என்னனு கேக்க நாதி இல்ல...!!
இப்படிக்கு
சரவணன்
Subscribe to:
Post Comments (Atom)
ithu entha atha maga saravana????????
ReplyDelete