Sunday, October 10, 2010
Saturday, October 9, 2010
சந்தோசம்..
படிக்க செல்கிறேன் என்று
பாதி நாட்டகள் உன்னை பார்க்கவே
வருவேன்
நீயும் அப்படியே..!!
அன்று நீ சைக்கிளில் வந்தாய் நான் நடந்து
சிறிய வாசல்
நீ செல்லட்டும் என்று நானும் ..!!
நான் செல்லட்டும் என்று நீயும் ..!!
நகராமல் அங்கேயே
ஒரு வழியாக நான் சென்றேன்...!!
பென்சில் கட்டி தொங்கிய
நூலக பதிவேட்டில்
என் கையெழுத்துக்கு பிறகு
உன் கையொப்பம் -அதில் ஒரு
அற்றப சந்தோசம் .!!!
நாளேட்டின் பகுதியில் நான் அமர
எதிர் இருக்கையில்-நீ ..!!
புயலுக்கு பின் கிடைத்த அமைதி அங்கே..!!!
அந்த அமைதியில் -என்
இதயத்துடிபும் -உன்
இதயத்துடிப்பும்
கேட்கிறது ..!!!!
உண்பர்வைக்கு அர்த்தம் புரியவில்லை ..!!
எழுந்து நூல்கள் பிரிவிற்கு சென்றேன்
ஒரு புத்தகத்தில் இரண்டு கண்கள்
ஒரு முகம் நீயும் - நானும் ..!!!
எதையோ பேச நினைத்து
பேசாமலேயே -நகர்கிறாய்...!!
நானும் அப்படியே...!!
உன்னை பர்க்கதனே இவ்வளவு தூரம்
பேசினால் என்ன- என்கிறது
மனது...!!
நீயும் அப்படியே நினைக்கிறாய்
உணர்கிறேன் நான்..!
நூலகரின் வரவினால் இடம் பெயர்ந்தேன் ..!
சற்று அருகில்
வார இதழ்களை புரட்டினேன்
சுவாரஸ்யமான பகுதிகள் இருந்தும்
எனக்கு வெறுப்பே ..!!
நீ வந்து அமர்ந்ததும் மீண்டும் புரட்டினேன்
வெருப்பானவை
விரும்பத்தக்க பகுதிகள் ஆகின ...!!
இபொழுது நூலகரின் பார்வை நம்மேல் ...!!
இதற்குமேல் இருக்க முடியாது
இடம் பெயர்ந்தோம்
நகர்ந்தோம்..!!
அந்த ஊமைச் சூழலில்-நமது
காதல் ஆயிரம் வார்த்தைகளை
பரிமாறிக்கொண்டன..!!
மணி மாலை ஆரைதண்டியது
நூலகம் மூடும் நேரம் ..!!
நீ வேண்ட வெறுப்பாய்
சைக்கிள் எடுத்தாய் ..!!
நான் நடக்கிறேன் என்ற பெயரில்
நின்றேன்..!!
ஊருக்கு பயந்து நான் முன்செல்ல
நீ தொடர்ந்தாய்...!!
படிக்க வரவில்லை உன்னை பார்க்க வந்தேன்
என்று சொல்லிட நினைத்து
சொல்லாமலே செல்கிறேன்
தயக்கமில்லை ..!!
என் காதல் என்னென்று சொல்ல
என் ஜென்மம் போதாது..!!
இந்த இரவை வெறுமையாக
கழிக்கிறேன்
விடியலை எதிர் நோக்கி
ஆவலாய் ..!!
நூலக பதிவேட்டில்
என் கையெழுத்துக்கு பிறகு
உன் கையொப்பம் -அதில் ஒரு
அற்றப சந்தோசம் .!!!
என்றும் அன்புடன்
சரவணன்.தி
மறுநாள் மீண்டும்
Wednesday, June 9, 2010
விழ..! விழ.. !எழுவோம் .!!
விழ..! விழ.. !எழுவோம் .!!
ஒன்றல்ல ஒரு நூறாய் ..!!
உழ.. ! உழ ..! உறமேரும்..!!
நிலம் போல .!!!
விழ விழ.. !எழுவோம் .!!
வீழ்ந்திட்டோம் என்றெண்ணி
வீருரை நிகழ்த்திட்டீர்..!!
உம் வீருரை வெற்றுரை ஆகும் நாள் .!!
தொலைவில் இல்லை..!!
அரசாண்ட எம்மை
அகதிகலாக்கிநீர் மீண்டும் யாம் அரசல்வோம் ..!!!
அன்று .!!!
புத்தன் போதித்த அன்பை எம்மில் காண்பாய் ..!!
நீயோ ..!! இன்று ..!!
புத்தம் செழித்த மண்ணில் ..!!
இரத்தம் சொரியக்கண்டாய்..!!!
இந்தக்குருதிப்புனல் உன்னை அடித்துச் செல்லும்
அசுரபலத்தோடு ..!!!!
இப்படிக்கு
சரவணன்.தி
Monday, May 24, 2010
இங்கே சிதிலமடைந்து கிடப்பது வெறும் கட்டிடம் அல்ல ..!!ஓர் இனத்தின் வரலாற்று சுவடு ..!!
ஆம் நம் தேசத் தலைவரின் இல்லம் ..!!
ஓர் இனத்தின் போராட்டம் .!!
ஒடுக்கப் பட்டவர்களின் உரிமைப் போர்..!!
வேரோடு பிடுங்கி எரிய முயற்சிக்கும் ஓர் கூட்டத்தின் ..!!
கொடுங்கோல் அரசின் வன்முறை வெறியாட்டம் ..!!
கல்லால் தடுப்பு கட்டி காட்டாற்றை தடுக்க இயலுமா..!!
அது போலத்தான் எங்கள் வீர வரலாறு ..!!
தமிழனின் நெஞ்சத்தில் எழுதப்பட்டு ..!!
உயிரில் உறைந்து போன எம் தலைவணனின் ..!!
வரலாறு எம் தமிழ் இனம் வாழும் வரை வாழும் ..!!
இப்படிக்கு....
தி.சரவணன்.
Wednesday, April 28, 2010
என் காதல் உனக்கு...!!!
கலவையே ..!!
உன்னை நித்தம் எண்ணியே என்
இதயத்தில் காதல் பூ பூத்ததம்மா .!!!
இன்று நீயோ மணக்கோலத்தில் .!!
உன்னை பிரிந்த அரைகுறை கவிஞனின்
இறுதிப் பதிவு....!!
இன்னும் என் ஆவி இந்த பூலோகத்தில்
நூலறுந்த காற்றாடியைப் போல
வானில் வட்டமிட்டு வண்ண நிலவை
வலையவருகிறது...!!!
நீ சுவாசித்த காற்றிலே பறக்கிறேன்
என்றெண்ணி ..!!!
உண் சுவாசமே சொர்க்கமென
தரை தொட மறுத்து
தட தட வென பறக்கிறது ..!!!
சுமை கல் தேடி அலைகிறேன்
என் சோக சுமையை சுமக்க ..!!
ஊமை மனதை தேடுகிறேன்
என் உள்ளத்தை எடுத்துரைக்க..!!
வீசும் காற்றில் விழும் எறிகட்களாய்
வீழ்ந்த இடம் தெரியாமல்
வெறும் காற்றாய் போனது என் காதல்..
வானத்தில் வண்ண நிலா வந்து போன தடம்
தெரிவதில்லை ..!!
அது போலத்தான் என் காதல் உனக்கு...!!!
இப்படிக்கு
சரவணன்.தி.
Thursday, February 25, 2010
கடந்து போன காலங்கள்..!!
தினம் உன்னை பார்க்கவே கல்லுரி வருவேன் நான்..!!
நீ வசிக்கும் தெரு என் பாதம் பட்டே தேய்ந்து போனது..!!
உன்னால் உதிர்க்கப்படும் அந்த ஒற்றை புன்னகைக்காக..!!
எத்தனனை நாள் ..!!!
என்னை காணமல் உன் கண் தேடும் அழகை
என்ன வென்று சொல்ல .!!
அதை காணவே நான் காணமல் போவேன்
உன்னை கண்டதும் கரைந்து போவேன்..!!
என்னுள் நான் உறைந்து போவேன்..!!
காலம் கடந்தும் என் கவிதைகளில்
அந்த நாட்களில் நடை போடுகிறேன்..!!
இன்று நீ எங்கு இருக்கிறாய் ..!!
இருந்தும் என் பாதங்கள் அந்த தெருவை இன்னும் தேய்த்துக்கொண்டே இருக்கின்றன ..!!!
அவற்றிக்கு தெரியாது என்னை நீ கடந்து போய்விட்டாய் என்று...!!
இப்படிக்கு.
Saravanan