Wednesday, December 19, 2012

நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்துவங்கினர்

வாகனங்களின் வேகம்
சாலைகளில்
சற்றுக் கூடியிருந்தது

குடும்பத் தலைவிகள்
மாடிக்கு ஓடினர்

இவ்வளவு
நேரமாய்ப் போகாதவன்
இப்பொழுது பார்த்தா
செல்லவேண்டும் கடைவீதிக்கு
வாஞ்சையுடன்
வருத்தப்பட்டாள் அம்மா

குளிர்பானம் விற்பவன்
சலித்துக்கொண்டான்

வராந்தாவில் விளையாடிய
குழந்தைகள்
வீட்டினுள் அழைக்கப்பட்டு
கதவு சாத்தப்பட்டது.

"மதியாதார் வாசலை மிதிக்கவேண்டாம்"
பள்ளிக்கூட ஓடுகளில்
தவழ்ந்த துளிகளின்
காதுகளுக்குக் கேட்டிருக்கும்போலும்

திசைமாறி
கடல்வீட்டினுள்
ஆனந்தமாய்ப் பெய்துகொண்டிருந்தது
மானமுள்ள மழை!
துயில் கொள்ளும் மாவீரர்களே ...!!
தமிழ் இனம் துன்பம் நீக்க நீர் துயில் கொண்டீர் ..!!
வணக்கங்கள் நூறு உங்களுக்கு ..!!!

"தம்பி "அண்ணனின்
தம்பிமார்களே ..!!

தாயத் தமிழ் நாட்டின்
தவப்புதல்வர்களே .!!

அனுராதா புறத்தில் தொடங்கி
முள்ளி வாய்களில் முடிவுற்றது
போர் மட்டும் தான்..!!!
போராட்டமல்ல என்பதை
இந்த மாவீரர் தினம் நினைவுபடுத்துகிறது .!!!

உங்கள் வீர மரணத்திற்கு
ஆண்டாண்டு காலம் இந்த தமிழ்ச்சமுதாயம்
நன்றிக்கடன் பட்டுள்ளது ..!!

நன்றியுடன்.
தி. சரவணன்.