Tuesday, November 17, 2020

 நண்பர் கூறிய கிராம பின்னணி ..கவிதை....அவர் கூறிய சூழலுக்கு

============================
மழை தண்ணி ஏதும் இல்லை ..
விவசாயம் விளைச்சலும் இல்லை ..
ஊரு சனம் காத்திருக்கு ...
காஞ்ச பூமி எப்போ ..மாறும்ம்னு.!!!
கருப்பு கோவில் பூசாரி அருள் வாக்கு கேட்கலாம்னு
ஊர் பெருசு சொல்ல..
ஊரு சனம் மொத்தமும் கூடிருச்சு ...
கோடங்கி வீட்டுல...
தலைக்கட்டு எல்லாம் கை கட்டி நிக்க
கோடங்கி குறி சொல்ல...உடுக்கை சத்தம் கூட சேர...
" பதினெட்டாம் படி கருப்பா...படியிறங்கி வந்துருடா..."
" சாதி சனம் காத்திருக்கு சண்டி கருப்பா வந்திருடா..."
"ஊரு சனம் காத்திருக்கு உருமா நீ வந்திருடா.."
"காஞ்ச பூமி செழிக்க நல் வாக்கு சொல்லிடுடா.."
"பஞ்சம் பசி போக்க , மூப்பு பிணி இல்லா நல் வாழ்க்கை தந்திடடா..."
பாட்டு சத்தமும் ...உடுக்கை சத்தமும்...ஒரு சேர கேக்குது..
ஊரு சனம் அத்தனையும் குலவை போட்டு ...கேக்குது...
நல் வாக்கு சொல்லு சாமி...
கூடியிருந்த கூட்டம் பார்த்து,..கோடங்கி சொன்ன குறி...
"குறைவில்லா கூட்டத்துக்கு குறையொன்னு வந்திருக்கு ..
கவலை ஒன்னும் வேண்டாம் ...கருப்பன் நானும் காத்திருப்பேன்...
காஞ்சு போன பூமியெல்லாம்...இனி காணியா மாறிப்போகும் ..
என்ன கருப்பா வேணும் உனக்கு ?
நா அமர புரவி இல்ல ...
காலொடஞ்சு காலம் ஆச்சு ..
போற வர மக்களெல்லாம்...ஏறெடுத்து பாக்கலையே ...
எல்லைச்சாமின்னு எடுத்து பாக்க ஆளில்லையே ..
ஒய்யாரமா நா உக்காந்தா புரவி ...உயிரில்லாம ஆடுது இங்கே .
ஊரு சனம் கூடி ஒத்துமையா புரவி எடுங்க.....!!
கோடங்கி மலையேற ...ஊர் பெருசு...திருநீர் அடிக்க....
குறிகேட்ட மொத்த சனம் ..திருவிழாக்கு ..தேதி கேக்க...
ஊர் பெருசு...இன்ன தொடக்கி ...ஏழாம் நாள் ...
புரவி எடுக்க ஏத்த நாளுன்னு ...குறிக்க...
சொந்த பந்தம் சொல்லணும்...
ஊரு போன மனுஷன் திரும்பணும் ...
இனிப்பு காரம் செய்யணும்...
வீடு வாசல் கழுவனும் ...
நாளும் கிழமையும் நெருங்கிடுச்சு...
காசு பணம் கையில் இல்ல...
என்ன செய்ய ஏது செய்ய...
எங்க குறை தீர்க்க குறி கேட்டோம் ..உன்கிட்ட ...
உங் குறைய...தீர்க்க சொல்லி...
எங்களை இன்னும் சும்மக்க வச்சுட்ட ...
சுமையோட சுமையா...இதையும் சுமக்குறோம்..
மழை தண்ணி பொழிஞ்சா சரி...!!!
பொழப்பு தழப்பு நடந்தா சரி...!!!!
புரவி எடுக்க புறப்படுவோம்....!!!
தி. சரவணன்

 இந்த இருக்கையில் உன்னை தவிர

யாருக்கும் இது வரையில் இடம் அளிக்க வில்லை.

யாரையும் அனுமதிக்க மனம் மறுக்கிறது..!!

 

அனுமதி இன்றி யாரேனும் அமர முற்பட்டால்..

இடம் காலி இல்லை என்ற சொல்...என்னையும்மீறி

வந்து விழுகிறது...!!  நீ இல்லை என்று தெரிந்தபின்பும் .!!

 

இன்றும் நான் அந்த இருக்கையில் அமர்ந்துதான் இருக்கிறேன்...

ஒரு புறம் நானும் ...மறுபுறம் நீயும்  இருக்கிறாய்

என்றெண்ணியே .!!

கடந்து போன விடயம் என்று ..என்னால் கடந்து போக இயலவில்லை

அந்த இருக்கையை கடந்து போகும்போதெல்லாம்

இதயம் இருமடங்காய் துடிக்கிறது...!!

 

நீ வாசம் செய்த வாசல் என்பதால்...என்னை நானே

ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன்...சற்று அங்கேயே அமர்ந்து...

இளைப்பாறுகிறேன்..!!

 

இன்று என் அருகில்  நீ இல்லை...இருக்கையின் மறுபுறம்

காய்ந்த சறுகுகள் நிரம்பி வழிகிறது   ஆம் -- இலையுதிர்க்காலம்

ஏனோ அமர மனமின்றி நகர்கிறேன் நான் அமர்ந்த இடம் மட்டும்

சறுகுகள் அற்று --இன்னும் சற்று நேரத்தில் அங்கேயும்  காய்ந்த சறுகுகள்  நிரம்பிடும் ..!! 

 

அந்த இருக்காய் மட்டும்  அப்படியே...

Tuesday, January 17, 2017

வீரமும் , மானமும் மறத்தமிழ்  சொத்த்து
மறவாதே  இந்த நாளை எந்நாளும் உன் வாழ்வில் .!!

நெருப்பாற்றில் நீந்தியும் நீதி பெறுவோம்
தமிழ் படைதிரட்டி உன் தடை உடைப்போம் .!!

நீ பகை கொண்டு வந்தால் உன் தலை கொய்யும் கூட்டமிது

நாகரீகம் கருதியே  நட்பையே நாடினோம்.!!

நயமாக பேசி பின்  நஞ்சுண்ண சொல்வதோ...!!

நாய்கள் என்றீர்  நாவடக்கி நின்றோம்.!!
பொறுக்கிகள் என்றீர் இனி பொறுமை காணோம்...!!

பொங்கி எழுந்தாரை கண்டு கடல் அலையும் கட்டுண்டு இருக்கிறது.,..!!
அரபிக் கடலோரம் அலை அலையாய் மக்கள் கூட்டம்...
அமைதி காப்போம் ..அனால் அடங்க மறுப்போம்...

                                 சரவணன்.தி

நண்பர்களே இந்த பதிவு நீண்ட நாட்களாக என் மனதில் இருந்தது சரியான சந்தர்ப்பம் அமையவில்லை.
ஆம் சில நாட்களுக்கு முன்பு என் நண்பருடன் முகநூலில் / கைபேசியில் உரையாடியதன் விளைவு இந்த பதிவு .
அந்த நண்பருடன் நிறைய விவாதித்திருக்கிறேன் நிறைய கற்றுக்கொண்டும் இருக்கிறேன்...ஆம் ஆக்கபூர்வமான விவாதங்கள் என்றும் நல்ல விஷயங்களை கற்றுத்தரும் .
இன்றைய கால சூழலில் பொதுவாக தமிழ் மக்கள் தனது சுய வரலாறை காலப்போக்கில் மறந்து விட்டார்களோ என எண்ணத்தோன்றுகிறது காரணம் உண்டு . சமூக வலைத்தளம் ஆகட்டும் சமகால அரசியல் மேடை ஆகட்டும் அனைவரும் மேலை நாட்டு எழுத்தாளனையும் , போராளியையும் அரசியல் தலைவரையும் பற்றி பேசுவதை போல் இந்த நாட்டு மேதைகளின் , போராளிகளின் மீது எனோ பாராமுகமாய் இருக்கின்றனர் . அவர்களுக்கு உவமை படுத்த உகந்த உத்தமர் இங்கு இல்லை என்று எண்ணினால் அவர்களின் விழிகள் ஊமை விழிகளோ என்றே எண்ணத்தோன்றுகிறது . அதற்காக மேலை நாட்டு போராளிகள், மேதைகள் எதிலும் குறைந்தவர்கள் இல்லை நிச்சியம் போற்றப்படவேண்டியவர்களே இன்னும் சொல்லப்போனால் என்னை கவர்ந்தவர்கள் நான் படித்து வியந்தவர்கள் ஏராளம் ( சேகுவரே , பிடல் காஸ்ட்ரோ ,ஓசோ ,) இன்னம் இந்த பட்டியல் நீளும் .
ஆயினும் எனது மனக்குறை ஒன்று உண்டு நம் சக தலைமுறை நமது முன்னோர்களை முன்னிறுத்தாமல் அவர்களின் கொள்கைகளை / போராட்டங்களை தனது தலைமுறைக்கு எடுத்துச்ச்சொல்லாமல் விட்டுவிட்டதோ என்ற எண்ணம் என்னை அரித்துக்கொண்டே இருக்கிறது . நாம் படித்தோம் கப்பலோட்டிய தமிழனை , கொடிகாத்த குமரனை , மகா கவி பாரதியை , சுப்ரமணிய சிவாவை , மா.போ.சியை , கக்கனை , காமராசரை , வீர பாண்டிய கட்டபொம்மனை, மருது சகோதரர்களை ஆனால் இன்றோ இவர்கள் ஒருவரையும் இன்றைய தலைமுறைக்கு தெரியவில்லை . தெரியவில்லை என்று சொல்வதை விட நாம் எவரும் இவர்களை பற்றி இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்கூறவில்லை அல்லது அத்தகைய வரலாறை நாம் அவர்களுக்கு கடத்த வில்லை என்பதே உண்மை.
அன்றிலிருந்து இன்று வரை மேலை நாட்டு மோகம் மேலை நாட்டு நாகரீகம் ,பண்பாடு ,கலாச்சாரம் அவை கடந்து இன்று வரலாற்றை மறைக்கும் அல்லது அழிக்கும் வேலை நடந்து கொண்டுருக்கிறது.
வராத காவேரியை பற்றி வாய் கிழிய பேசும் சமூகம்
வற்றாத ஜீவ நதி தாமிரபரணியை கண்டுகொள்ள மறுக்க்கிறது..
இன்றோ அச் ஜீவநதி அழிந்துகொண்டுருக்கிறது .
நிலவில் கால் பதித்த ஆம்ஸ்ட்ராங் சொன்னார் நிலா எவ்வளவு அழகு என்று.
வின் வெளிக்கு சென்ற யூரி கோங்கர் சொன்னார் வின் வெளிக்கு சென்ற பிறகுதான் தெரிந்தது பூமி நிலவை விட அழகானது என்று .!!
இது போலத்தான் நான் மேல குறிப்பிட்டுள்ள கருத்துக்கள்.
நான் மேலை நாட்டு மேதைகளை / போராளிகளை அவர்களின் கருத்துக்களை பற்றி பேசவேண்டாம் என்று கூறவில்லை நம்மவர்கள் பற்றி நம் தலைமுறைக்கு எடுத்துக்கூறுங்கள் என்றே கூறுகிறேன்..வரலாறு மறக்கடிக்கப்படுவதற்குள் நாம் மற்றவர்களுக்கும் எடுத்துரைப்போம்..
அன்புடன்
தி.சரவணன்
கற்றுக்கொடுப்பது தமிழினம்.!!
நீர் கற்றுக்கொடுக்க நினைப்பது அறிவீனம்...!!!
ஆயிரம் தடைகள் ஆயினும் என்ன
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் என் இன அடையாளம் இன்னும் அப்படியே..!
எவன் சொன்னது மதமும் , ஜாதியும் மனித அடையாளம் என்று.
இங்கு வந்து பார் தெரியும் உனக்கு எம் அடையாளம் எதுவென்று..!!
பிளிறும் களிரையே கட்டியாண்ட இனம் இது..
என் காளையுடன் தழுவி விளையாட காவல் எதற்கு .!!
உலகத்துக்கே நாகரீகம் கற்றுக்கொடுத்தவர்கள் இன்னும் கற்றுக்கொடுப்பவர்கள்..!!
அதன் பால் அன்பு கொண்டே கட்டுண்டு கிடந்தோம்
இனி பயன் இல்லை ஆங்கே பயமும் இல்லை .!
இனி எவர் தடுத்தும் விடோம் .!!
விடியட்டும் புதிய தமிழகம்...
சரவணன்.தி
நீண்ட  இடைவெளிக்குப் பிறகு  நண்பர் ஒருவரின்
தூண்டுதல் மீண்டும் எழுதலாம் என்ற எண்ணம்...