Sunday, October 10, 2010

மலர்கள் எல்லாம் போராட்டம்
நடதுகின்றனவாம் - உன்னால்..?
நீ உதிர்க்கும் புன்னகையில்
வண்டுகள் எல்லாம் காற்றில்
தேன் குடித்து செல்கின்றனவாம் ..!!
பாவம் மலர்கள் பிழைத்துப்போகட்டும்
உன் புன்னகயை கொஞ்சம் குறைத்துக்கொள்...!!!

என்றும் அன்புடன்..
சரவணன்.தி.

Saturday, October 9, 2010

சந்தோசம்..

அந்த ஊரின் அருகில் ஒரு நூலகம்
படிக்க செல்கிறேன் என்று
பாதி நாட்டகள் உன்னை பார்க்கவே
வருவேன்
நீயும் அப்படியே..!!

அன்று நீ சைக்கிளில் வந்தாய் நான் நடந்து
சிறிய வாசல்
நீ செல்லட்டும் என்று நானும் ..!!
நான் செல்லட்டும் என்று நீயும் ..!!
நகராமல் அங்கேயே
ஒரு வழியாக நான் சென்றேன்...!!

பென்சில் கட்டி தொங்கிய
நூலக பதிவேட்டில்
என் கையெழுத்துக்கு பிறகு
உன் கையொப்பம் -அதில் ஒரு
அற்றப சந்தோசம் .!!!

நாளேட்டின் பகுதியில் நான் அமர
எதிர் இருக்கையில்-நீ ..!!

புயலுக்கு பின் கிடைத்த அமைதி அங்கே..!!!

அந்த அமைதியில் -என்
இதயத்துடிபும் -உன்
இதயத்துடிப்பும்
கேட்கிறது ..!!!!

உண்பர்வைக்கு அர்த்தம் புரியவில்லை ..!!

எழுந்து நூல்கள் பிரிவிற்கு சென்றேன்
ஒரு புத்தகத்தில் இரண்டு கண்கள்
ஒரு முகம் நீயும் - நானும் ..!!!
எதையோ பேச நினைத்து
பேசாமலேயே -நகர்கிறாய்...!!
நானும் அப்படியே...!!

உன்னை பர்க்கதனே இவ்வளவு தூரம்
பேசினால் என்ன- என்கிறது
மனது...!!

நீயும் அப்படியே நினைக்கிறாய்
உணர்கிறேன் நான்..!

நூலகரின் வரவினால் இடம் பெயர்ந்தேன் ..!

சற்று அருகில்
வார இதழ்களை புரட்டினேன்
சுவாரஸ்யமான பகுதிகள் இருந்தும்
எனக்கு வெறுப்பே ..!!

நீ வந்து அமர்ந்ததும் மீண்டும் புரட்டினேன்
வெருப்பானவை
விரும்பத்தக்க பகுதிகள் ஆகின ...!!

இபொழுது நூலகரின் பார்வை நம்மேல் ...!!

இதற்குமேல் இருக்க முடியாது
இடம் பெயர்ந்தோம்
நகர்ந்தோம்..!!

அந்த ஊமைச் சூழலில்-நமது
காதல் ஆயிரம் வார்த்தைகளை
பரிமாறிக்கொண்டன..!!

மணி மாலை ஆரைதண்டியது
நூலகம் மூடும் நேரம் ..!!

நீ வேண்ட வெறுப்பாய்
சைக்கிள் எடுத்தாய் ..!!
நான் நடக்கிறேன் என்ற பெயரில்
நின்றேன்..!!

ஊருக்கு பயந்து நான் முன்செல்ல
நீ தொடர்ந்தாய்...!!

படிக்க வரவில்லை உன்னை பார்க்க வந்தேன்
என்று சொல்லிட நினைத்து
சொல்லாமலே செல்கிறேன்
தயக்கமில்லை ..!!
என் காதல் என்னென்று சொல்ல
என் ஜென்மம் போதாது..!!

இந்த இரவை வெறுமையாக
கழிக்கிறேன்
விடியலை எதிர் நோக்கி
ஆவலாய் ..!!


நூலக பதிவேட்டில்
என் கையெழுத்துக்கு பிறகு
உன் கையொப்பம் -அதில் ஒரு
அற்றப சந்தோசம் .!!!


என்றும் அன்புடன்
சரவணன்.தி

மறுநாள் மீண்டும்