Tuesday, January 17, 2017

நண்பர்களே இந்த பதிவு நீண்ட நாட்களாக என் மனதில் இருந்தது சரியான சந்தர்ப்பம் அமையவில்லை.
ஆம் சில நாட்களுக்கு முன்பு என் நண்பருடன் முகநூலில் / கைபேசியில் உரையாடியதன் விளைவு இந்த பதிவு .
அந்த நண்பருடன் நிறைய விவாதித்திருக்கிறேன் நிறைய கற்றுக்கொண்டும் இருக்கிறேன்...ஆம் ஆக்கபூர்வமான விவாதங்கள் என்றும் நல்ல விஷயங்களை கற்றுத்தரும் .
இன்றைய கால சூழலில் பொதுவாக தமிழ் மக்கள் தனது சுய வரலாறை காலப்போக்கில் மறந்து விட்டார்களோ என எண்ணத்தோன்றுகிறது காரணம் உண்டு . சமூக வலைத்தளம் ஆகட்டும் சமகால அரசியல் மேடை ஆகட்டும் அனைவரும் மேலை நாட்டு எழுத்தாளனையும் , போராளியையும் அரசியல் தலைவரையும் பற்றி பேசுவதை போல் இந்த நாட்டு மேதைகளின் , போராளிகளின் மீது எனோ பாராமுகமாய் இருக்கின்றனர் . அவர்களுக்கு உவமை படுத்த உகந்த உத்தமர் இங்கு இல்லை என்று எண்ணினால் அவர்களின் விழிகள் ஊமை விழிகளோ என்றே எண்ணத்தோன்றுகிறது . அதற்காக மேலை நாட்டு போராளிகள், மேதைகள் எதிலும் குறைந்தவர்கள் இல்லை நிச்சியம் போற்றப்படவேண்டியவர்களே இன்னும் சொல்லப்போனால் என்னை கவர்ந்தவர்கள் நான் படித்து வியந்தவர்கள் ஏராளம் ( சேகுவரே , பிடல் காஸ்ட்ரோ ,ஓசோ ,) இன்னம் இந்த பட்டியல் நீளும் .
ஆயினும் எனது மனக்குறை ஒன்று உண்டு நம் சக தலைமுறை நமது முன்னோர்களை முன்னிறுத்தாமல் அவர்களின் கொள்கைகளை / போராட்டங்களை தனது தலைமுறைக்கு எடுத்துச்ச்சொல்லாமல் விட்டுவிட்டதோ என்ற எண்ணம் என்னை அரித்துக்கொண்டே இருக்கிறது . நாம் படித்தோம் கப்பலோட்டிய தமிழனை , கொடிகாத்த குமரனை , மகா கவி பாரதியை , சுப்ரமணிய சிவாவை , மா.போ.சியை , கக்கனை , காமராசரை , வீர பாண்டிய கட்டபொம்மனை, மருது சகோதரர்களை ஆனால் இன்றோ இவர்கள் ஒருவரையும் இன்றைய தலைமுறைக்கு தெரியவில்லை . தெரியவில்லை என்று சொல்வதை விட நாம் எவரும் இவர்களை பற்றி இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்கூறவில்லை அல்லது அத்தகைய வரலாறை நாம் அவர்களுக்கு கடத்த வில்லை என்பதே உண்மை.
அன்றிலிருந்து இன்று வரை மேலை நாட்டு மோகம் மேலை நாட்டு நாகரீகம் ,பண்பாடு ,கலாச்சாரம் அவை கடந்து இன்று வரலாற்றை மறைக்கும் அல்லது அழிக்கும் வேலை நடந்து கொண்டுருக்கிறது.
வராத காவேரியை பற்றி வாய் கிழிய பேசும் சமூகம்
வற்றாத ஜீவ நதி தாமிரபரணியை கண்டுகொள்ள மறுக்க்கிறது..
இன்றோ அச் ஜீவநதி அழிந்துகொண்டுருக்கிறது .
நிலவில் கால் பதித்த ஆம்ஸ்ட்ராங் சொன்னார் நிலா எவ்வளவு அழகு என்று.
வின் வெளிக்கு சென்ற யூரி கோங்கர் சொன்னார் வின் வெளிக்கு சென்ற பிறகுதான் தெரிந்தது பூமி நிலவை விட அழகானது என்று .!!
இது போலத்தான் நான் மேல குறிப்பிட்டுள்ள கருத்துக்கள்.
நான் மேலை நாட்டு மேதைகளை / போராளிகளை அவர்களின் கருத்துக்களை பற்றி பேசவேண்டாம் என்று கூறவில்லை நம்மவர்கள் பற்றி நம் தலைமுறைக்கு எடுத்துக்கூறுங்கள் என்றே கூறுகிறேன்..வரலாறு மறக்கடிக்கப்படுவதற்குள் நாம் மற்றவர்களுக்கும் எடுத்துரைப்போம்..
அன்புடன்
தி.சரவணன்

No comments:

Post a Comment