இந்த இருக்கையில் உன்னை தவிர
யாருக்கும் இது வரையில் இடம் அளிக்க வில்லை.
யாரையும் அனுமதிக்க மனம் மறுக்கிறது..!!
அனுமதி இன்றி யாரேனும் அமர முற்பட்டால்..
இடம் காலி இல்லை என்ற சொல்...என்னையும்மீறி
வந்து விழுகிறது...!! நீ இல்லை என்று தெரிந்தபின்பும் .!!
இன்றும் நான் அந்த இருக்கையில் அமர்ந்துதான் இருக்கிறேன்...
ஒரு புறம் நானும் ...மறுபுறம் நீயும் இருக்கிறாய்
என்றெண்ணியே .!!
கடந்து போன விடயம் என்று ..என்னால் கடந்து போக இயலவில்லை
அந்த இருக்கையை கடந்து போகும்போதெல்லாம்
இதயம் இருமடங்காய் துடிக்கிறது...!!
நீ வாசம் செய்த வாசல் என்பதால்...என்னை நானே
ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன்...
இளைப்பாறுகிறேன்..!!
இன்று என் அருகில் நீ இல்லை...இருக்கையின் மறுபுறம்
காய்ந்த சறுகுகள் நிரம்பி வழிகிறது ஆம் -- இலையுதிர்க்காலம்
ஏனோ அமர மனமின்றி நகர்கிறேன் நான் அமர்ந்த இடம் மட்டும்
சறுகுகள் அற்று --இன்னும் சற்று நேரத்தில் அங்கேயும் காய்ந்த சறுகுகள் நிரம்பிடும் ..!!
அந்த இருக்காய் மட்டும் அப்படியே...
No comments:
Post a Comment