Wednesday, April 28, 2010

என் காதல் உனக்கு...!!!

என் காவியமே கவிதைகளின்
கலவையே ..!!
உன்னை நித்தம் எண்ணியே என்
இதயத்தில் காதல் பூ பூத்ததம்மா .!!!

இன்று நீயோ மணக்கோலத்தில் .!!
உன்னை பிரிந்த அரைகுறை கவிஞனின்
இறுதிப் பதிவு....!!

இன்னும் என் ஆவி இந்த பூலோகத்தில்
நூலறுந்த காற்றாடியைப் போல
வானில் வட்டமிட்டு வண்ண நிலவை
வலையவருகிறது...!!!
நீ சுவாசித்த காற்றிலே பறக்கிறேன்
என்றெண்ணி ..!!!
உண் சுவாசமே சொர்க்கமென
தரை தொட மறுத்து
தட தட வென பறக்கிறது ..!!!

சுமை கல் தேடி அலைகிறேன்
என் சோக சுமையை சுமக்க ..!!

ஊமை மனதை தேடுகிறேன்
என் உள்ளத்தை எடுத்துரைக்க..!!

வீசும் காற்றில் விழும் எறிகட்களாய்
வீழ்ந்த இடம் தெரியாமல்
வெறும் காற்றாய் போனது என் காதல்..

வானத்தில் வண்ண நிலா வந்து போன தடம்
தெரிவதில்லை ..!!
அது போலத்தான் என் காதல் உனக்கு...!!!

இப்படிக்கு
சரவணன்.தி.










No comments:

Post a Comment